முத்தம்

Monday, February 14, 2011


நொடிகளை நாட்களாக்கி
நகம் கடித்து காத்திருக்க
நிதானமாக வருவாய்
நேரத்திற்க்கு


தாமதத்திற்கு தண்டனை முத்தம் 
தரவேண்டுமென்பேன் 
நான் ஏன்? தரவேண்டுமென்பாய்.!
நேரம் கழித்து வந்ததற்கென்பேன்.!
லூசு! நீதான்டா முன்னமே வந்து
காத்திருக்கிறாய் என்று 
கை கடிகாரத்தை காண்பிப்பாய் பின்பு 


காலம் தெரியாமல் 
காதல் பேசிக் கிடந்து 
கனவில் கண்ட இனிய 
நிமிடங்களை 
நிஜமாக்கித்தருவாய்.. 
புறப்படுவதற்கு முன்பு 


எனது
ஏக்கத்தை புரிந்து கொண்டு 
ஏமாற்றாமல் தருவாய் 
எனக்கான முத்தங்களை 
எப்படியோ காத்திருந்த நமது காதலுக்கு 
எதிர்பார்த்தபடி முத்தம் கிடைத்தது. 

 

இனிய காதலர் தின வாழ்த்துக்கள்


19 கருத்துரைகள்:

sakthistudycentre-கருன் said...

வடை வாங்க வந்துட்டோம்ல ....

sakthistudycentre-கருன் said...

இதுதான் உண்மையான கவிதை.. அருமை..அருமை..நான் எழுதரது கவிதைன்னு சொல்லிக்களாம் அவ்வளவுதான்..

sulthanonline said...

உங்கள் ஆதரவிற்கு மிக்க நன்றி கருன்

# கவிதை வீதி # சௌந்தர் said...

கவிதைகள் அருமை..
புகைப்படங்ள் பொருத்தமாக உள்ளது..
வாழ்த்துக்கள்..

sulthanonline said...
This comment has been removed by the author.
sulthanonline said...

# கவிதை வீதி # சௌந்தர் said...
கவிதைகள் அருமை..
புகைப்படங்ள் பொருத்தமாக உள்ளது..
வாழ்த்துக்கள்..


உங்கள் ஆதரவிற்கு நன்றி அண்ணா.

sakthistudycentre-கருன் said...

See.,
http://sakthistudycentre.blogspot.com/2011/02/blog-post_18.html

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

நல்லா இருக்குங்க கவிதை :)

RAZIN ABDUL RAHMAN said...

கவிதை சூப்பரா இருக்கு சகோ...

நல்லா எழுதுரீங்க..

வாழ்த்துக்கள்

அன்புடன்
ரஜின்

சி.பி.செந்தில்குமார் said...

கவிதை கலக்கல்.. அதே போல் பொருத்தமான ஸ்டில்கள் அழகு

சௌந்தர் said...

உங்களை வலைச்சரத்தில் அறிமுகம் செய்தது இருக்கிறேன் http://blogintamil.blogspot.com/2011/04/blog-post_07.html

அப்பாவி தங்கமணி said...

கலக்கல்...:))

பாரத்... பாரதி... said...

காதல் கசிகிறது கவிதையின் வரிகளில், தொடர்ந்து எழுதுங்கள்...

sulthanonline said...

//அப்பாவி தங்கமணி said...
கலக்கல்...:))//


நன்றி மேடம்.

sulthanonline said...

//பாரத்... பாரதி... said...
காதல் கசிகிறது கவிதையின் வரிகளில், தொடர்ந்து எழுதுங்கள்...//


நன்றி சகோ

Giruba said...

அருமை அருமை

Thamizhmaangani said...

பின்னிட்டீங்க போங்க:))) எப்படிங்க???

sulthanonline said...

நன்றி Giruba

sulthanonline said...

@Thamizhmaangani
நன்றி தோழி

Post a Comment