மைத்துளிகள்

Saturday, June 11, 2011

8 கருத்துரைகள்


என்னைப் போலவே
கலங்கி நிற்கிறது 
எனது பேனா 
மைதுளிகளுடன்..
பிரிந்த உன்னைப்பற்றி
எழுத நினைக்கையில்...முத்தம்

Monday, February 14, 2011

19 கருத்துரைகள்

நொடிகளை நாட்களாக்கி
நகம் கடித்து காத்திருக்க
நிதானமாக வருவாய்
நேரத்திற்க்கு


தாமதத்திற்கு தண்டனை முத்தம் 
தரவேண்டுமென்பேன் 
நான் ஏன்? தரவேண்டுமென்பாய்.!
நேரம் கழித்து வந்ததற்கென்பேன்.!
லூசு! நீதான்டா முன்னமே வந்து
காத்திருக்கிறாய் என்று 
கை கடிகாரத்தை காண்பிப்பாய் பின்பு 


காலம் தெரியாமல் 
காதல் பேசிக் கிடந்து 
கனவில் கண்ட இனிய 
நிமிடங்களை 
நிஜமாக்கித்தருவாய்.. 
புறப்படுவதற்கு முன்பு 


எனது
ஏக்கத்தை புரிந்து கொண்டு 
ஏமாற்றாமல் தருவாய் 
எனக்கான முத்தங்களை 
எப்படியோ காத்திருந்த நமது காதலுக்கு 
எதிர்பார்த்தபடி முத்தம் கிடைத்தது. 

 

இனிய காதலர் தின வாழ்த்துக்கள்


தயக்கம்

Tuesday, February 1, 2011

14 கருத்துரைகள்
ஏற்றுக்கொள்வாளா என்ற 
குழப்பமான பயத்தில் நானும் 
சொல்வானா என்ற வெட்கம் கலந்த
 குழப்பத்தில் நீயும் இருக்க
 பொறுமையை சோதித்துக்கொண்டிருந்தது 
நமது காதல்..!